மத்தியமுகாம் பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கள்



மத்தியமுகாம்  பிரதேசத்தில் அல்-கிம்மா நிறுவனத்தின் அணுசரனையில் வறிய குடும்பங்களுக்கு இலவச  குடிநீர் இணைப்புக்கான நிதி வழங்கும் நிகழ்வு சாளம்பைக்கேணி-04 அல்-அஷானி மகளிர் சங்க தலைவி வை.நஸ்லியா தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும்,  முன்னாள் கல்முனை மாநகர  பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.நஸார்,  அமீர் அலி விளையாட்டுக் கழக தலைவரும், அல்-அமானா சமூக சேவைகள் அமைப்பின் தலைவருமான  எம்.வீ.நபாஸ், அல்-கிம்மா நிறுவனத்தின் நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் மௌலவி எஸ்.எம்.சலீம், ஹைரீயா ஜும்ஆப்  பள்ளிவாசல் தலைவர் எம்.அலியார், நூராணிய ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.சீ.அன்வர், ஆசிரியர் எஸ்.கில்வான்,  மகளிர் சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பயனாலிகள் என பலரும் கலந்துகொண்டனர்.