சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலயத்திற்கு யஹியாகான் பௌண்டேசனினால் Multimedia Projector கையளிப்பு



தான் கல்வி கற்ற ஆரம்ப பாடசாலையான சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலய மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், யஹியாகான் பௌண்டேசன் அமைப்பினுடைய தலைவருமாகிய அல்ஹாஜ் A.C. யஹியாகான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு Multimedia Projector ஒன்றினை கையளிப்பு செய்தார்.
இந்நிகழ்வு கல்லூரியின் அதிபர் எம்.ஐ. நிபாயிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இங்கு அதிபர் அவர்கள் உரையாற்றும் போது இப்பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களில் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் இவர்கள் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். ஆகவே இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் இப்பாடசாலையின் அபிவிருத்தியில் அக்கறை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும், பிரதம அதிதி அவர்கள் உரையாற்றும் போது இப்பாடசாலையின் பழைய மாணவர் என்பதில் பெருமிதமடைகின்றேன். இப்பாடசாலையின் குறைபாடுகள் பற்றி அதிபர் மூலமாக அறிந்து கொண்டேன். எதிர் காலத்தில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுடன் இணைந்து இப்பாடசலையினை முன்னேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்வேன் என குறிப்பிட்டார். 

மேலும் குறிப்பிடுகையில் இப்பாடசாலையில் முக்கிய தேவையாகவிருந்த திறந்த மேடையினை (Open Stage) ஒன்றினை மிக சவாலுக்கு மத்தியில் கடந்த காலங்களில் அமைத்துக் கொடுத்தேன். அதோ போன்று இன்னும் இப்பாடசாலை எதிர்காலத்தில் அபிவிருத்தியடையும் என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் போது சாய்ந்தமருது கோட்டைக்கல்வி பணிப்பாளர் அவர்களின் சார்பாக ஆசிரியர் ஆலோசகர்களினால் சாய்ந்தமருது ஆரம்பக் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பது சம்பந்தமான எதிர்கால திட்டம் அடங்கிய மகஜர் ஒன்றினை பிரதம அதிதியிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர் ஆலோசகர் எஸ். சஹ்ரூன் மற்றும் செயத்திட்ட உத்தியோகத்தர் ஏ.எல்.ஏ. ராசிக் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்