கடலில் சுறா மீன் தாக்குதலில் உயிர் தப்பிய முஸ்லிம் மீனவர் !

NEWS
1 minute read


அலி முஹமது ஹமது அல் பலோஷி எனும் 41 வயதுடைய இமராத்தி மீனவர் நேற்று காலை சுமார் 7 மணியளவில் தனது நண்பருடன் வழமைபோல் புஜைரா அருகேயுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான கோர்பக்கான் கடலில் மீன் பிடிக்கச் சென்றார்.

கோர்பக்கான் கடற்கரையிலிருந்து சுமார் 5 நாட்டிகல் மைல் தொலைவில் 18 அடி ஆழத்தில் மூழ்கி அரிய மீன்களை வேட்டையாடி கொண்டிருந்த போது இடையில் மூச்சுவிட்டு இளைப்பாருவதற்காக தண்ணீருக்கு மேல் வந்த நேரத்தில் எதிர்பாராவிதமாக 200 கிலோ எடையுடைய சுறா மீன் ஒன்று அவரது காலை கவ்விப்பிடித்து கடித்துத் தாக்கியது.

இந்த சுறாத் தாக்குதலை மேலிருந்து கவனித்துக் கொண்டிருந்த நண்பர் உடனடியாக சுதாரித்து அந்த சுறாவை மீன் வேட்டைக்குப் பயன்படும் ஹர்பூன் துப்பாக்கியால் சுட்டதை தொடர்ந்து அலி முஹமதுவை சுறா விடுவித்தது என்றாலும் மீனவர்கள் இருவரும் சேர்ந்து 'வேட்டையாட வந்த சுறாவையே வேட்டையாடி' படகில் ஏற்றி வெற்றிகரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

கரை திரும்புமுன் சுறாவால் தாக்கப்பட்ட செய்தியை போலீஸ், ஆம்புலன்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்திருந்ததால் உடனடியாக கோர்பக்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். தனது 16 வருட அனுபவத்தில் எத்தனையோ சிறிய சுறாக்களை பார்த்திருப்பதாகவும் ஆனால் தன்னைத் தாக்கிய சுறாவே அதில் மிகப்பெரியது என்கிறார் அலி முஹமது.

Source: Gulf News
To Top