புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா



புத்தளத்திலிருந்து எம்.யூ.எம். சனூன் 

புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) காலை, கல்லூரியின் பிரதான மணடபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவுள்ளார். 

கௌரவ அதிதிகளாக வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா எஸ். ராஜபக்ஷ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். நவவி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.