அறிஞர் சித்தி லெப்பை அவர்கள் நாட்டை நேசிக்கும் அறிவுஜீவிகளாகச் செயற்படும் நாகரீகமடைந்த சமூகத்தை உருவாக்கவே அயராது உழைத்தார்கள்.
முஸ்லிம்கள் தாய்நாட்டை நேசிக்கும்
கௌரவமான தேசிய இனம் என்பதை விளக்குவதற்கு National Muslim Leadership Council (NMLC) எனும் உயர்சபை அவசியமாகும்.
கௌரவமான தேசிய இனம் என்பதை விளக்குவதற்கு National Muslim Leadership Council (NMLC) எனும் உயர்சபை அவசியமாகும்.
இலங்கை முஸ்லிம்கள் மிகவும் நிதானமாக
செயற்படவேண்டிய ஒரு தருணத்தில் வாழ்கிறார்கள்.
செயற்படவேண்டிய ஒரு தருணத்தில் வாழ்கிறார்கள்.
அரசிடம் எதைக் கோர வேண்டும். தமிழ்த்தரப்புடன் எதனைச் சரிகாண வேண்டும் என்பதை அறிய துறைசார் விற்பன்னர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து செயற்பட வேண்டியுள்ளது.
தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியபோது எமது முன்னோர்கள் ஜனநாயக வழியில்
பாேராடவே எமக்கு வழிகாட்டினார்கள்.
பாேராடவே எமக்கு வழிகாட்டினார்கள்.
சிந்தனாரீதியிலான தலைமைத்துவத்தை நிறுவ NMLC முன்வருவதே ஆரோக்கியமானது.
தர்காநகர் பற்றி எரிந்ததும் வில்பத்து விவகாரமும் மாணிக்கமடு சிலை விவகாரமும் மாவனல்லை சம்பவங்களும் வடமாகாண முஸ்லிம்களை வெளியேற்றியமையும் ஒரு நேர் கோட்டில் வைத்துப் பார்க்கவேண்டிய நிகழ்வுகளாகும்.
இதுவரை நாம் இந்த நிகழ்வுகளை
முறையாகப் பகுப்பாய்வு செய்யாமல் நமக்கான நீண்டகால இலக்கினை வகுக்காமல் நிபுணர்களை அணுகாமல் உணர்ச்சிகளுக்கு மட்டும் அடிமையாகி அரசியல்வாதிகளை அவதாரங்களாக நம்பி ஏமாந்து விட்டோம்.
முறையாகப் பகுப்பாய்வு செய்யாமல் நமக்கான நீண்டகால இலக்கினை வகுக்காமல் நிபுணர்களை அணுகாமல் உணர்ச்சிகளுக்கு மட்டும் அடிமையாகி அரசியல்வாதிகளை அவதாரங்களாக நம்பி ஏமாந்து விட்டோம்.
இனியாவது சிந்தித்து செயல்படுவோம். NMLC நமக்கான கொள்கைகளை வகுக்கட்டும். ஆய்வு செய்து வழிகாட்டட்டும்.
{SIDDI LEBBE RESEARCH FORUM] சித்தி லெப்பை ஆய்வு மன்றம் National Muslim Leadership Council (NLMC) இன் உருவாக்கத்தில் தனது முழுமையான பங்களிப்பினை நல்க உறுதி பூண்டுள்ளது