நவீன ஜாஹிலிய்யா கால முஸ்லிம் இளைஞர் யுவதிகள்; அல்லாஹூ அக்பர்

முஸ்லிம் என்ற தனித்துவம் எம்மைவிட்டு எந்த சந்தர்ப்பத்திலும் விட்டு விலகிவிடக்கூடாது, ஈமான் கொண்டு இறைவிசுவாசிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எமது இறைத்துாதர் காட்டிய வழியோடும் இறைவனின் திருப்பொருத்தத்தோடும் வாழ்ந்துவிட வேண்டும்.

ஆனால் இன்று எதற்காகவும் இஸ்லாமியத்தை இழந்துவிடும் சூழலில் வாழைப்பழகிவிட்டோம் குர்ஆன் ஹதீஸ் என்றால் அருவருப்பு, அதைப்பின்பற்றிவிட அதைவிட அருவருப்பு மற்றயவர் ஏதோ கூறிவிடுவர் என்பதற்காக மேற்கத்தய கலாச்சாரத்தை பின்பற்றி சின்னாபின்னமாகிறோம்.

கப்ருக்குழிக்குள் எதைக்கொண்டு செல்லப்போகிறோம், இறுக்கமான ஆடைகளா அல்லது ஐபோன்களா? அல்லது பேஸ்புக்கா? வாட்ஸ் அப் சட்டிங்கா? ஒன்றும் இல்லை அனைத்தும் போலி. இன்று அதிகமாக இஸ்லாமியத்தை மறந்துவாழும் ஒருகூட்டமாக இளைஞர் யுவதிகள் காணப்படுகின்றனர்.

மேற்கத்தைய கலாச்சார தனியார் கல்லுாரிகளில் படிப்பதால் அதே கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என எண்ணுகின்றனர், உடை நடையை அதற்கு ஏற்றாற்போல் மாற்றுகின்றனர். இதனை பெற்றோர்களும் கண்டு கொள்வதில்லை காரணம் பிள்ளைகள் வெளிநாடு செல்லப்போகின்றன அப்படித்தான் என்று விட்டுவிடுகின்றனர். இது குறித்து கவனம் எடுப்பது யார்?

ஒரு கல்லுாரியில் கல்விபயிலும் இளைஞர் யுவதிகளின் நிலைதான் இது.