தீவிரவாதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க டிரம்ப் புதிய திட்டம்

NEWS



அமெரிக்கா விசாவை பெறுவதற்கு பேஸ்புக், டிவிட்டர் கணக்கு விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்ற முறை அமலுக்கு வரவுள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுபடுத்த H1-B விசாவில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்தார்.

மேலும், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாவில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர தற்போது உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அமெரிக்கா விசாவுக்கான விண்ணப்பத்தில், இனி 5 ஆண்டுகளாக பயன்படுத்திவரும் பேஸ்புக், டிவிட்டர், இ-மெயில், தொலைபேசி எண் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் விசா விண்ணப்பதாரர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா என அறிய முடியும் என அமெரிக்க குடியுரிமை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LANKASRI
Tags
3/related/default