தேசிய
ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு எதிராக முஸ்லிம் சமய விவகார
அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மான நஷ்டயீடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்
போவதாக அறிவித்துள்ளார்.
தனக்கு
எதிராகவும் திணைக்களத்துக்கு எதிராகவும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு
எதிராகவும் அசாத் சாலி அண்மையில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப்
புறம்பானவை என்றும் அவற்றுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல்
செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமய திணைக்களத்தில் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அசாத் சாலி குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
