முன்னாள்
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக தாக்கல்
செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்ய இன்று நீதிமன்றம் திகதி
குறித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த
அரசாங்கத்தின் போது வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதால் 10 இலட்சம்
ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக இவர் மீது வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.