ஏ.எஸ்.எம்.ஜாவித்
பிறை பார்ப்பதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் அதனை மக்களுக்கு தெளிவூட்டும் வகையிலான கருத்தரங்கு ஒன்றினை கொழும்பு பெரிய பள்ளிவாசல் அகில இலங்கை ஜமிய்யதல் உலமாவின் பிறைக் குழுவுடன் இணைந்து நேற்று (14) கொழம்பு பெரிய பள்ளி வாசலின் பிரதான மண்டபத்தில் பள்ளி வாசலின் தலைவர் சட்டத்தரணி நத்வி பகவுடீன் தலைமையில் நடாத்தியது.
இதன்போது பிறைப்பார்ப்பது எவ்வாறு, கண்ட பிறைகள் தொடர்பாக சாட்சிகளுடன் முடிவெடுப்பது அதில் ஏற்படும் தடங்கள்கள், குறைபாடுகளைத் தீர்ப்பது மற்றும் இஸ்லாமிய மாதங்களை தீர்ப்பதில் வானியலின் பங்கு ஆகிய தலைப்புக்களில் மௌலவி ஏ.எல்.எம்.ரிழா(அல்-மக்தூமி), மௌலவி எஸ்.ஐ.எம்.அஸ்மீர் (ஹஸனி), மௌலவி எம்.எச்.அப்துல் நாசர் (றஹ்மானி) ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு வருகை தந்தவர்களுக்கு விளக்கமளித்தனர்.
இதன்போது வரவேற்புரையை உரையை பெரிய பள்ளி வாசலின் தலைவர் சட்டத் தரணி நத்வி பகவுடீனும், தலைமை உரையை பிறைக் குழுவின் தலைவர் மௌலவி ஏ.டபிள்யு.எம்.றியாழ் (பாரி) யும் விஷேட உரையை பிறைக் குழுவின் பிரதித் தலைவர் மௌலவி ஜே. அப்துல் ஹமீட் (பஹ்ஜி)யும் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சார்பாக மௌலவி முக்சிதும். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சார்பாக ஏ.எஸ்.எம்.ஜாவிதும் உரை நிகழ்த்தினர். நன்றியுரையை கொழும்பு பெரிய பள்ளிவாசலின் மதீனதுல் இல்ம் அறபிக் கல்லூரியின் பிரதி அதிபர் மௌலவி எம்.எப்.அப்துல் அஸீசும் வழங்கினார்.
இந்நிகழ்வில் சகல பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஷாவியாக்கள் மற்றும் மேமன் சங்கப் பிரதிநிதிகள், புத்தி ஜீவிகள், மார்க்க அறிஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.