ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடிக் கிளை நடாத்திய இரத்ததான முகாம் 07.05.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 110 நபர்கள் கலந்து கொண்டு 100 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்துலில்லாஹ்.
பிற்பகல் மூன்று மணி வரை இரத்தம் கொடுக்கலாம் என்று மக்களுக்கு அறிவித்திருந்தும் தவிர்க்க முடியாத காரணத்தால் இரண்டு மணியுடனேயே நிகழ்ச்சியை முடிக்கும் நிலை ஏற்பட்டு, பல சகோதரர்கள் திருப்பி அனுப்பப் பட்டமை வருத்தத்துக்குரியது.
அத்தோடு இந்நிகழ்வு மிகவும் சிறந்த முறையில் நடந்து முடிவதற்கு பெரும் பங்களிப்பு செய்த குருதிக் கொடையாளர்களுக்கும், காத்தான்குடி மத்திய கல்லூரி நிர்வாகத்தினருக்கும்,காத்தான்குடி தள வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும், மற்றும் தொண்டர்களுக்கும் காத்தான்குடிக் கிளை சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.
SLTJ ஊடகப்பிரிவு
