மேல் மாகாணத்தில் முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டிய 271 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் காவற்துறை மற்றும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் அதிகமானோர் நுகேகொட பிரதேசத்தை சேர்ந்தவர்களுடன், அதில் 73 பேர் அடங்குகின்றனர். சந்தேக நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக காவற்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
