சிலோன் முஸ்லிம் ஊடக அலுவலகம் தாக்கப்பட்டமைக்கான காரணத்தையும் யார் என்னை மிரட்டினார்கள் என்பது பற்றிய விடயங்களையும் உலகிற்கு சொல்ல தக்க தருணம் பார்த்து காத்திருக்கிறேன் என சிலோன் முஸ்லிம் பிரதம ஆசிரியரும் பிரதானியுமான பஹத் ஏ.மஜீத் தெரிவித்தார்.
நல்லாட்சியில் ஊடகம் மீதான தாக்குதலை கண்டித்தும் அதற்கான தீர்வை தேடிய பயணத்தை ஆரம்பித்துள்ள பஹத் ஏ.மஜீத் அவர்கள் இன்று சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் குறித்த விடயத்தை பேசியுள்ளார்.
கடந்த ஐந்தாண்டு காலமாக இணைய செய்தி ஊடகத்தை மக்களுக்காக நாங்கள் செய்துவருகிறோம், ஒடுக்கப்பட்ட முஸ்லம் சமூகத்தின் தனித்துவ குரலாக இணையத்தில் தங்கள் பயணத்தை தொடருவதை ஒருசில அதிகார வர்க்கத்தினர் விரும்புவதில்லை அதுதான் காரணம் எதையும் அவர்கள் தான் செய்ய வேண்டும் அதாவது அதன்மூலமும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.
முஸ்லிம் ஊடகம் என்று சொல்லி ஆரம்பித்து அதன் மூலமும் பணம் சம்பாதிக்கின்றனர் இறுதியில் அது இயங்காது காணப்படும் இல்லையேல் அது வேறு விடயங்கள் பற்றி பேசும் என்றார்.
இந்த சமூகத்தின் சாபக்கேடுகள் குறித்த ஆதாரங்கள் விரைவில் வெளியிடப்படும், இந்த ஆதாரங்களை வெளியிட்டால் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படாலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

This is for popularity. He is a lier . Don't ever trust them
ReplyDelete