உள்ளுராட்சிசபைகோரி சாய்ந்தமருதில் பிராத்தனை!

TODAYCEYLON



எம்.வை.அமீர்

சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையான உள்ளுராட்சிசபையை உடன் பிரகடனப்படுத்த இறைவனது உதவியைக்கோரி சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் 2017-08-18  ஆம் திகதியன்று ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து பிராத்தனைகள் இடம்பெற்றன.

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி பிராத்தனையின்போது குறித்த உள்ளுராட்சிசபை விடயத்தில் பங்கெடுத்த அனைத்துக்கட்சிகள் சமூக நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் போன்றோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் இந்தமக்களின் எதிர்பார்ப்பை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு இறைவன் நல்ல என்னத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் பிராத்திக்கப்பட்டது.


Tags
3/related/default