ஹனீபா மதனியினால் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

NEWS



றிசாத் ஏ காதர்

மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் காணப்பட்ட அக்கரைப்பற்று 11ம்வட்டாரத்தின் மஜீட் வீதியும்,3ம் வட்டாரத்தின் ஆலிம் வீதியும் பல லட்சம் ரூபாசெலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதற்கான வேலைகள்   ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குன்றுங்குளியுமாகத் தோற்றமளித்துபோக்குவரத்துக்கு பொருத்தமற்றுக்கிடந்தஇவ்வீதிகளின் புனர் நிர்மாணப்பணிக்குத் தேவையான நிதியினைஅரசாங்கத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை அக்கரைப்பற்றுமாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும்சிறிலங்கா முஸ்லீம்காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எல்.எம் ஹனீபா மதனிமேற்கொண்டிருந்தார்

அதன் பலனாக கிடைக்கப்பெற்ற நிதியினைக் கொண்டு  இவ்வீதிகளுக்கான   அடிக்கல் நடும் நிகழ்வு ஆரம்ப சம்பிரதாய அண்மையில் இடம்பெற்றது

குறித்த வீதி நிர்மாணப் பணிக்கு நிதியினை பெற்று புனரமைக்க உதவியதுக்குஇப்பகுதிவாழ் மக்கள் அஷ்ஷேஹ் ஹனீபா மதனிக்கு நன்றியையும்,பாராட்டினையும் தெரிவிக்கின்றனர்

மேற்படி நிகழ்வில் அரசியல் செயற்பாட்டாளர்கள்சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர்கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Tags
3/related/default