முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமால் ஒன்றையும் செய்துவிட முடியாத நிலை இருப்பதாகவும், சமூகத்துக்கு இவர் சாபக்கேடு எனவும் தெரிவித்தார் முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஹனீபா மதனி தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் தகுதி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு இல்லை, வட்டமடு காணிப்பிரச்சினை உள்ளிட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை, வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை,
இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு இல்லை, ஊர் அபிவிரு்தி செய்யப்படவில்லை இதை எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இன்னும் அந்தக்கட்சியில் இருக்க முடியாது, அதனால்தான் அமைச்சர் ரிசாதுடன் இணைந்தேன் என்றார்.
