தேசியப்பட்டியலை அட்டாளைச் சேனைக்கு வழங்கபடாதவிடத்து அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலை முஸ்லிம் காங்கிரஸ் வெல்வது என்பது பாரிய சவாலாக இருக்கும் என அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருமித்து கூறியுள்ளனர்,
இன்று கிறீன் வில்லா ஹோட்டலில் இடம்பெற்ற தேர்தல் கலந்துரையாடல் கூட்டத்தில் குறித்த விடயம் பேசப்பட்டது, மேலும் அந்த கூட்டத்தில் பரிமாறப்பட்ட கருத்துக்கள்,
யானைச் சின்னத்தில் போட்டியிடுவது, தேசியப்பட்டியல் இழுத்தடிக்கப்படுவதால் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது மிக கடினம் என ஒருமித்த கருத்தாக குறிப்பிட்டனர், என்றாலும் தலைமை மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்ட வேட்பாளர் சபையை அதி விசேட வாக்குகளுடன் கைப்பற்றுவோம் என குறிப்பிட்டுள்ளனர்.
