அதாஉல்லாவின் புதல்வர் என என்னை பார்க்காமல், நானும் அக்கரைப்பற்றில் சாதாரண ஆசிரியருக்கு பிறந்தவன் என பார்க்குமாறு முன்னாள் மேயர் சக்கி குறிப்பிட்டுள்ளார்.
இன்று சமூக வலைத்தளங்களில் புதல்வர்கள் இருவர் களமிறக்கப்பட்டுள்ளமை குறித்து எமது செய்தி ஆசிரியருக்கு பதிலளித்த சக்கி,
அதாஉல்லாவின் புதல்வர்கள் என எங்களை பார்க்காமல் அக்கரைப்பற்று குடிமகன் என பாருங்கள், கடந்த ஆட்சிக்காலத்தில் நாங்கள் செய்த சேவைகளை பாருங்கள், மாநகரசபையின் திட்டங்களை கனவில் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்,
நாங்கள் செய்து காட்டினோம் இன்று அழகான காற்றை சுவாசிக்கிறீர்கள். எனக்கோ எனது தந்தைக்கோ தற்காலத்தை விட எதிர்கால சிந்தனைதான் அதிகம் அதற்காக பேசியதுதான் அதிகம், எமது கட்சியும் அப்படித்தான். நாங்கள் இறைவன் துணையுடன் செய்தோம் இனியும் வாய்ப்பளித்தால் செய்வோம் என்றார்.
