ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பு மனு திருட்டு!!!


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தாக்கல் செய்யப்படவிருந்த வேட்பு மனு நேற்று இரவு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹொரனை பிரதேச சபையில் சமர்பிக்கப்படவிருந்த வேட்பு மனுவே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின், பொகுனுவிடயில் உள்ள வீட்டில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத மூவர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை அச்சுறுத்திகுறித்த வேட்பு மனுவைக் களவாடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.