சில்லறை நாணயம் வழங்கும் ATM இயந்திரங்கள் வருகிறது

NEWS


இலங்கையில் புதிய வகை ஏரிஎம் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நாணயத்தாள்களுக்கு பதிலாக சில்லறையை வழங்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சில்லறைகளுக்கு காணப்படும் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. சில்லறை விநியோகம், புனரமைப்பு முறையாக மேற்கொள்வதற்காக இந்த இயந்திரம் பொருத்தப்படவுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நிதி நிர்வாக நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் அதி நவீன நிதி நிர்வாக மத்திய நிலையம் ஒன்றும் நிறுவுவதற்கு மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளது.
Tags
3/related/default