சிலோன் முஸ்லிம் பிரதான புகைப்பட ஊடகவியலாளர் றிம்ஜானின் காரின் மீது தாக்குதல்!

சிலோன் முஸ்லிம் ஊடக வலயமைப்பின் பிரதான புகைப்பட ஊடகவியலாளர் ஆசுக் றிம்ஜானின் காரின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது, சிலோன் முஸ்லிம் அட்டாளைச்சேனை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஆசுக் றிம்ஜான் திறமையான புகைப்பட ஊடகவியலாளர், சிங்கள-முஸ்லி்ம் கலவரங்கள் மற்றும் புகைப்பட அறிக்கையிடல், அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் படம் சொல்லும் கதை என்பவற்றை கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்து வந்திருந்தார். குறித்த தாக்குதல் உள்ளுர் அரசியல்வாதிகள் அல்லது இனவாதிகளால் மேற்கொள்ள பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதல் திட்டமிட்டதாக இருக்கலாம், மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள், இந்த தாக்குதலுக்கு தெற்காசிய சமாதான ஊடக அமைப்பு, தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் ஒன்றியம், முஸ்லிம் ஊடக பேரவை - கிழக்கு ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளது.

சிலோன் முஸ்லிம் அலுவலகம் மீது கடந்த 11-07-2017 அன்றும் விசமிகள் தாக்குதல் நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்