மஹிந்த கூறும் கருத்துத்துக்கள் நகைச்சுவையாக உள்ளது.

NEWS



ஜே.எம்.ஹபீஸ்

மகிந்த ராஜபக்சவின் புகைப்படத்தை காட்சிப் படுத்தி அரசியல் செய்யும்  மொட்டுக் கட்சியில தான் அங்கத்துவம் பெறவில்லை என்று மகிந்த ராஜபக்ச கூறுவது நகைப்புக்குறிய விடயமாகும் என்று உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா (15.1.2018) தெரிவித்தார்.


கண்டி, மஹய்யாவ பிரதேசத்தில் இடம் பெற்ற உள்ளுராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரிய யுத்த வெற்றியை பெற்றுக் கொடுத்த கட்சியாகும்.  அது சாதாரண மக்களின் கட்சியாகும்.

ஐம்பெரும் சக்திகளினால் கட்டி எழுப்பப்பட்ட கட்சியாகும். பாரிய அபிவிருத்திப் பணிகள் செய்த பிரதான கட்சியாகும். இதன் காரணமாக  முது கெழும்பில்லாத சிலர் ஸ்ரீ.ல.சு.க யை காலால் இழுக்க முற்படுகின்றனர். சவால் விடுவதாயின் நேர் முகாக நின்று சவால் விடுக்க வேண்டும. மறைமுக சாவல்களை நாம் கவனத்திற் கொள்ளத் தேவையில்லை.


தாமரை மொட்டு என்ற கட்சிக்கான தலைவர் ஜி.எல். பீரிஸ். அவர் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர். அத்துடன் பசில் ராஜபக்சதான் மகிந்த ராஜபக்சவின் தோல்விக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
 அவர் அக்கட்சியின்  அமைப்பாளராக உள்ளார்.


இந்நிலையில் பொதுமக்களால் ஒதுக்கப்பட்ட இருவர் வழி நடத்தும் கட்சியாக அது உள்ளது.  அதே நேரம் மகிந்த ராஜபக்சவின் புகைப்படத்தை காட்சிப் படுத்தியே அவர்கள் அரசியல் செய்கின்றனர்.  ஆனால் மகிந்த ராஜபக்சவோ தான் அக்கட்சியில் அங்கத்தவர் அல்ல எனக் கூறுகிறார். இது தான் பாரிய நகைப்பாக உள்ளது.


கட்சி என்றால் கொள்கை கோட்பாடுகள் இருக்க வேண்டும். இவ்றுவா எந்தக் கொள்கையுமில்லாத அனாதரவான கட்சியாக அது உள்ளது. கொள்கை இல்லாத கட்சியால் என்ன செய்ய முடியும்.  மத்திய வங்கி முறி தொடர்பாக ஹரீன் பெர்னான்டோ தெரிவித்த விடயம் பற்றி எமக்குக் கவலை இல்லை. அவரது குற்றச் சாட்டை ஏற்க முடியாது. ஏனெனில் அவர் இளவயதினர். இளமைப் துடிப்பால் கூறும் கூற்றுக்கள் கருத்து  இருக்காது என்றார்.
Tags
3/related/default