நள்ளிரவு தாண்டியும் மன்னாரில் தொடர்ந்த ஸ்ரீ.சு.கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பணிகள்





மன்னார் செளத்பார் வட்டாரம் எமில் நகரில்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.ராஜன்அவர்களை ஆதரித்து நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் கலந்து சிறப்பித்தார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களிப்பதன் அவசியம் பற்றி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ மஸ்தான் காதர் அவர்களும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சேனக்க அபேகுணசேகரவும் மக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.



வன்னி மாவட்டத்தில் துரித கதியில்  வளர்ச்சியடையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இம்முறை பல ஆசனங்களை கைப்பற்றும் என அரசியல் ஆய்வாளர்கள் பலர் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.