அமைச்சர் பௌசிக்கு எதிரான லஞ்ச வழக்கு ஒத்திவைப்பு
February 24, 2018
அரசாங்க வாகனமொன்றை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் அமைச்சர் பௌசிக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்குச் சொந்தமான வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு பத்து லட்சம் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக அமைச்சர் பௌசி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. எனினும் பிரதான மாஜிஸ்திரேட் விடுமுறையில் சென்றிருந்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த மேலதிக மாஜிஸ்திரேட் நீதிபதி ரங்க திசாநாயக்க, எதிர்வரும் ஜூன் மாதம் 25ம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
Tags
