ஏ.சி பள்ளிவீதி குறித்து அதிகாரிகள் கவனக்குறைவு; மக்கள் விசனம் - துாசுக்கள் அதிகம்
February 24, 2018
சிலோன் முஸ்லிம் அட்டாளைச்சேனை செய்தியாளர்
எம்.ரி இம்தியாஸ்
அட்டாளைச் சேனை ஏ.சி பள்ளி வீதி நிர்மாணப்பணிகள் கடந்த மூன்று மாதகாலமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது, இதனால் வீதியால் செல்லும் பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகின்றனர்.
இவ்வீதியில் பாடசாலை, பள்ளிவாசல், மத்ரசாக்கள் உள்ளது, கடும் துாசுக்கள் இருப்பதால் சுகாதாரமும் பாழடைந்துள்ளது, இந்த வீதி கடந்த டிசம்பரில் முடிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்றும் முடிவடையவில்லை.
உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து வேலைகளை முடிக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்
Tags
