அக்கரைப்பற்றின் உள்ளக வீதிகள் உடனடியாக புணர்நிர்மானிக்கப்படும் - மேயர் சக்கி

NEWS
0


மாநகர சபையில் உரையாற்றிய மேயர் சக்கியின் உரையின் ஒருபகுதி

எமது உள்ளக வீதிகள் திறம்பட திட்டமிடப்பட்டு முறையான வடிகான்களோடு செப்பனிடப்பட்டிருக்கின்றன.கோலாகலமாக இவ்வீதிகள் திறக்கப்படாவிட்டாலும் மக்கள் பாவனையே எங்கள் நோக்கமாக இருந்ததினால், வேலைக்கு அவைகளை மக்கள் அனுபவிக்கும் பொருட்டு கையளிக்கக் கூடியதாக இருந்தது. 

இதனால் நன்மையடைந்த மக்கள் இன்று நமக்காய் பிராத்திக்கின்றனர். சபையின் காலம் முடிந்ததாலும், உள்ளுராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டதாலும், நமக்கான அரசியல் அதிகார இழப்பீட்டினாலும் எம் வீதி அபிவிருத்திப் பணிகளில் பின்னடைவுகள் ஏற்பட்டன. 

இதனால் மாநகரம் முழுவதிலும் இக்குறைபாட்டினால் ஆங்காங்கே அசௌகரியங்களுக்கு உள்ளாகும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வரும் நாட்களில் அவர்களது ஆதங்கங்கள் தீரும் அளவிற்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும் என்றார்
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default