கண்டி இனக்கலவரம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க தீர்மானம்!

NEWS
0


இவ்வருடம் மார்ச் மாத ஆரம்ப காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய பிரதேசங்களை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் விளைவால் உயிரிழந்த மூன்று நபர்களுக்காகவும் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா வீதம் அவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈட்டு தொகையினை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவங்களின் போது காயமடைந்த நபர்களுக்காக வைத்திய அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு 250000 ரூபா நஷ்டஈட்டு தொகையினை பெற்றுக் கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்நிர்மானம், மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default