முஸ்லிம் காங்கிரசை விட்டு செல்லவேண்டிய தேவை எனக்கில்லை - றியா மசூர் பேட்டி

NEWS
0

அலுவலக செய்தியாளர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தான் செல்ல விருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் சிலோன் முஸ்லிம் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்திக்கு பதில் வழங்கிய றியா மசூர்,

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விட்டுச் செல்ல வேண்டிய தேவைக ஒருபோதும் எனக்கு இருக்கவில்லை, இருக்கப்போவதுமில்லை, ஒரு சிலரின் விருப்பம் அப்படி இருக்கலாம். இந்த கட்சிக்காக என்னுடைய தந்தையும் எனது குடும்பமும், நானும் மிகுதியாக உழைத்துள்ளோம் அதுவும் இதய சுத்தியோடு பாடு பட்டுள்ளோம். இதனை விரும்பாத சிலர் என்னை ஓரம்கட்ட துடிக்கின்றனர். இது முஸ்லிம்களுக்கான கட்சி, இது தனிநபருக்கானது அல்ல.

அமைச்சர் றிசாத் பதியுதீன் அல்லத அவர்சார்ந்தவர்களோடு எந்தவொரு பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை, அதற்கான சாத்தியங்களும் இல்லை.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதான் எனது கட்சி, இதில் தான் முஸ்லிம்களுக்கு தீர்வு என்றார் அவர்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default