ஜனாதிபதி பொம்மையாக இருப்பதில் எந்த பயனும் இல்லை - சரத் பொன்சேகா

NEWS
0
Image result for சரத் பொன்சேகா
மக்களுக்கு சேவை செய்ய முடியாத, அதிகாரமில்லாத ஜனாதிபதிப் பதவியில்  பொம்மையாக ஒருவர்  இருந்து எந்தவிதப் பயனுமில்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அவரிடம் வினவிய போதே இதனைக் கூறினார்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்து நன்கு ஆய்வு செய்த பின்னரே ஜனாதிபதியின் அதிகாரத்தை மாற்றுவது குறித்து தீர்மானிக்க வேண்டும்.
அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது எனவும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டார். 
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default