நாங்களே மீண்டும் இலங்கையில் ஆட்சியமைப்போம் அதற்கு இதுவே ஆதாரம் - பசில் ராஜபக்ஸ

NEWS
0
Image result for பஸில் ராஜபக்ஸ

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நாம் வெற்றி பெற்றதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

இதில் முதற்காரணம் மஹிந்த ராஜபக்ஸ, இரண்டாவது காரணம் கட்சியின் உறுப்பினர்கள் என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொதுஜன பெரமுன குறுகிய காலத்தில் கூடுதலான மக்கள் பிரதிநிதிகளையும், இலட்சக்கணக்கான கட்சி உறுப்பினர்களையும் கொண்டு சக்தி வாய்ந்த கட்சியாக மாறியுள்ளது.

மேலும், எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மஹிந்தவை இந்த நாட்டு ஜனாதிபதியாக்குவதே எமது நிலைப்பாடு.

மீண்டும் மஹிந்த தலைமையில் ஆட்சியமைத்து வீழ்ச்சியடைந்துள்ள தேசத்தை கட்டியெழுப்புவோம் என்றும் பஸில் குறிப்பிட்டுள்ளார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default