நாடாளுமன்றறை கலைப்பதற்கு இணங்கினாலே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்கு ஆதரவளிப்போம்!

NEWS
0


நாடாளுமன்றறை கலைப்பதற்கு இணங்கினால் மட்டும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்கு ஆதரவளிப்பதென கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்த செய்வது குறித்த யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றியதன் பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என உறுதி வழங்கப்பட்டால் மட்டும் யோசனைக்கு ஆதரவளிக்கப்படும் என நிபந்தனை விதிக்க உள்ளது.

ஜே.வி.பி.யினால் விரைவில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது குறித்த 20ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவைப்படுகின்றது.

இந்த யோசனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றை கலைப்பதாக அரசாங்கம் உறுதி வழங்கினால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய ஆதரவளிக்கப்படும் என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

எனினும், அதிகாரபூர்வமாக இது பற்றிய நிலைப்பாட்டை கூட்டு எதிர்க்கட்சியோ அல்லது மஹிந்த ராஜபக்சவோ வெளியிடவில்லை என என்பது குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default