பாராளுமன்றத்திற்காக வீண்விரயம் செய்வதை விட மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யலாமே!

NEWS
0
Image result for அமைச்சர் சஜித்

மக்களின் பிரதிகள் 225 பேர் கொண்ட பாராளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாவில் வீடில்லாத 2000 குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுக்க முடியும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை புனரமைப்புச் செய்ய இவ்வளவு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவது அனாவசியமானது எனவும் மக்கள் பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்தது அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே அன்றி சொகுசு கொண்டாடுவதற்கல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாவும் தனது அமைச்சுக்கு வழங்கப்பட்டால், 25 வீடுகளைக் கொண்ட 80 கிராமங்களை உருவாக்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default