கண்டி வன்முறை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

NEWS
0 minute read
0


கண்டி - தெல்தெனிய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி எனப்படும் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின் விளக்கமறியல் காலமும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 18 சந்தேகநபர்களும் இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அனைவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் “மஹாசோன பலகாய” என்ற அடிப்படைவாத அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
To Top