முஜிபுர் ரஹ்மானை இந்த பதவிக்கு நியமிக்குக! ரணிலிடம் கோரிக்கை

NEWS
0


பிரதி சபாநாயகர் பதவியில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களினால், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த கோரிக்கை அடங்கிய கடிதம் இன்று பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் திலங்க சுமதிபால பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.

திறமையான செயற்திறன் மிக்க ஒருவருக்கு இந்தப் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default