சிரிய தலைநகரின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்!

NEWS
0

சிரியாவின் தலைநகரிற்கு அருகில் உள்ள இராணுவநிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் எவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் ஏவிய இரு ஏவுகணைகளை சிரியாவின் எவுகணை பாதுகாப்பு பொறிமுறை சுட்டு வீழ்த்தியுள்ளதாக  சனா செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன் போது இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என  செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்த தாக்குதலில் அரச படையினர் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சுயாதீன தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட பகுதியில் பாரிய சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரிய இராணுவ அதிகாரியொருவர் சிரிய இராணுவ நிலைகளே இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சிரிய இராணுவத்தின் ஆயுத களஞ்சியமே இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் ஈரானிய படையினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default