மைத்திரியிடம் மன்னிப்புக் கேட்ட பொன்சேகா!

NEWS
0
Image result for maithiri with sarath fonseka

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று மதியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து மன்னிப்பு கோரியதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், அமைச்சர் பொன்சேகா சில அமைச்சர்களுடன் சென்று ஜனாதிபதியை சந்தித்து மன்னிப்பு கோரியதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா கடந்த 3ஆம் திகதி புதிய அமைச்சு பதவியின் கடமைகளை பொறுபேற்றுக் கொண்ட பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்தார்.

அத்துடன் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்திலும் ஜனாதிபதியின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார். இது சம்பந்தமாக ஜனாதிபதியை இன்று மதியம் சந்தித்து மன்னிப்பு கோரியதாக தகவல்கள் கூறுகின்றன.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default