கண்டி வன்முறைகள் தொடர்பில் மேலும் மூவர் கைது!

Image result for கண்டி வன்முறைகள்

கண்டிப் பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் தொடர்பில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி வன்முறைகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

பூஜாப்பிட்டிய, அம்பதென்ன, வெலேகட ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் இவர்கள் நேரடித் தொடர்பு கொண்டிருந்தமை சாட்சியங்கள் மற்றும் தடயங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பொலிசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மூவரும் பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் நிலையில் இன்று காலை கொழும்பில் இருந்து சென்ற விசேட குழுவினர் அவர்களைக் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூஜாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்படவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் அறிவித்துள்ளனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்