பாராளுமன்றம் தொடர்பில், பொய் தகவல்களை பரப்பும் அரச ஊடகங்கள்- மரைக்கார் ஆவேசம்

இலங்கை அரச தொலைக்காட்சிகள் அனைத்தும் இன்று (23) பாராளுமன்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அதன் ஒளிபரப்புக்களை நிறுத்திவிட்டு 27ஆம் திகதி சபை நடவடிக்கை தொடரும் எனக்கூறியதை வண்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மரைக்கார் சபையில் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ;

இங்கிருந்தும் அரச தொலைக்காட்சிகளின் ஊடகவியலாளர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அமர்வுகளை பார்த்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 


அரச தொலைக்காட்சிகள் வரம்புமீறி செயற்படுவதையும் மன்சாட்சிக்கு விரோதமான முறையில் செயற்படுவதையும், உண்மைகள் நிலைநாட்டப்படவில்லை எனவும் அங்கு மரைக்கார் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்ற செய்தியாளர் சிலோன்முஸ்லிம்