இன்பராசா விவகாரம் : ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் ஆஜர்

NEWS
0
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார். 

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு சம்பந்தமாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு ஆஜராக அழைக்கப்பட்டுள்ளார். 

ஹிஸ்புல்லா தனக்கு தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கந்தசாமி இன்பராசா என்பவர் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ம் திகதி திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இன்று காலை 11.30 மணியளவில் அவர் திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default