கொரொனாவால் இறக்குமுன் மனைவிக்கு உருக்கமான குறிப்பை செல்போனில் பதிவு செய்த கணவன்


அமெரிக்காவில் கொரொனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்த நபர், இறக்கும் தருவாயில் தனது மனைவிக்கு உருக்கமான குறிப்பை தனது செல்போனில் பதிவு செய்துவைத்துள்ளார்.

கொரொனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த கணவன், இறக்கும் தருவாயில் தன் மனைவிக்கு உருக்கமான குறிப்பு ஒன்றை தனது செல்போனில் எழுதிவைத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஜோனாதன் என்பவருக்கு, கடந்த மார் 26ம் தேதி கொரொனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் அவருக்கு வெண்டிலேட்டர் கருவி பொறுத்தப்பட்டது.

ஆனால், ஏப்ரல் 22ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக அவரது மனைவிக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. ஆனாலும் அவர் மருத்துவமனைக்கு வந்துசேரும் முன்னரே ஜோனாதன் இறந்துவிட்டார். அவரது உடைமைகளை மருத்துவமனை நிர்வாகம் அவரது மனைவியிடம் கொடுத்தபோது, செல்போனில் ஒரு குறிப்பு இருந்ததை கண்டறிந்தார் ஜோனாதனின் மனைவி.

அதில், “நான் உங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன். நான் எதிர்பாராத சிறந்த வாழ்க்கையை எனக்கு நீங்கள் கொடுத்துள்ளீர்கள். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. உன்னுடைய கணவன் என்பதிலும் நம் இரண்டு குழந்தைகளுக்கும் அப்பா என்பதிலும் நான் பெருமை கொள்கிறேன். நான் பார்த்ததிலேயே சிறந்த பெண் நீ. நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே எனது ஆசை. உலகின் சிறந்த தாயாக நீ இருப்பதை பார்த்ததுதான் நான் அனுபவித்த சந்தோஷங்களில் மிகவும் சிறந்தது.

நம் குழந்தைகளுக்கு சொல்…அவர்கள் எப்போது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று. அதுதான் எனக்கு முக்கியம். உங்களை மிகவும் நேசிக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த ஜோனாதனின் மனைவி கண்ணீரில் மூழ்கினார். ஜோனாதன் – கேட்டி தம்பதியினருக்கு 2 வயது ஆண் குழந்தையும் 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்