வவுனியா சிவபுரம் வீதியில் நீர் வியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மன்னார் வீதியில் இருந்து சிவபுரம் செல்லும் பாதையில் நீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் துவிச்சக்கரவண்டியுடன் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுக்கப்பட்டது.
குழியில் மழை நீர் தேங்கி நிற்பதுடன் பாதுகாப்பற்ற குழி என்ற சமிக்ஞைகளும் காணப்பட்டவில்லை. இக்குழியிலேயே அவ்வீதியால் சென்ற ஒருவர் வீழ்ந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த குழியில் சடலமாக காணப்படுபவர் 4 ஆம் கட்டை கற்பகபுரத்தை சேர்ந்தவர் எனவும், அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாகவும், உணவை பெறுவதற்காக சிவபுரத்திற்கு மாலை 4.30 மணிக்கு சென்றிருந்ததாகவும் நெளுக்குளம் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
0 கருத்துகள்