ஹிஜ்ரி 1441 புனித ரமழான் நோன்புப் பெருநாளை தீர்மானிப்பதுக்கான மாநாடு இன்று சனிக்கிழமை மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.
இதில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிறைக்குளு உறுப்பினர்கள், மேமன் பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முஸ்லிம் சிரேஷ்ட வானிலை அதிகாரி ஆகியோர் கலந்து கொள்வர்.
