20 ஆவது திருத்தம் தொடர்பாக சபாநாயகருக்கு லக்ஷ்மன் கிரியெல்ல கடிதம்






சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல அனுப்பிய கடிதத்தில் 20 ஆவது திருத்தம் சட்டத் துக்கு முரணானது எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொவிட்-19 கொரோனா தொற்றா ளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக கொரோனா தொற்றாக மாறிவிட்டது.

கொவிட்-19 அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் தெரிவித் திருந்தபோதிலும் இது நடக்கவில்லை.

மேலும், கொவிட் -19 கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு வர சுமார் 10 மாதங்கள் சென்றன.







உலகின் ஏனைய நாடுகள் மே மாதத்துக்குள் தேவையான விதிமுறை களைச் சமர்ப்பித்தன. அந்நாடுகள் பல விதிமுறைகளைத் தாமதப் படுத்தி வர்த்தமானியில் வெளியிட்டன.

இந்நிலையில் நம் நாட்டில் விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்படுத்தப்பட வேண்டுமானால் கூட்டங்களைக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அத் தோடு,சமூக இடைவெளி பேணப்பட வேண்டும்.

பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமரும் விதம் அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு முரணானது.

கூட்டங்களை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், பாராளு மன்றத்தை நடத்துவதும் சட்ட விதிகளுக்கு எதிரானது.


சட்டமன்றமே சட்டத்தை மீறினால் நாட்டுக்கு முன்மாதிரியாக அமைவது என்ன?

எனவே, இந்த வாரம் நடைபெறவுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத் தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க தேவையான நடவடிக்கைக ளை எடுக்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்.

அதன்படி, எதிர்க்கட்சியாக நாங்கள் கேட்பது, மேலே கூறப்பட்ட விடயங் கள் தொடர்பாகக் கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தை வழங்கு மாறும், இந்த வாரம் பாராளுமன்றக் கூட்டத்தொடர் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க கூட்டப்பட வேண்டும் எனவும் அவர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்