விசேட சுற்றிவளைப்பு மேல் மாகாணத்தில் பலர் கைது.



மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 131 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (27) காலை 06 மணிமுதல் இன்று (28) அதிகாலை 05 மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதன்போது 11 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா ‎அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.‎

சட்டவிரோத மதுபானங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்களில் 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரை ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 1,162 சந்தேக நபர்கள் ‎கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 174 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.‎

கருத்துரையிடுக

0 கருத்துகள்