மானிட அன்பை கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்த உத்தமர் நபி - பிரதமர் மஹிந்த மீலாத்தின வாழ்த்து



முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கொண்டாடுகின்ற இலங்கையில் வாழ்கின்ற சகல இஸ்லாமிய மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மனிதத்துவத்தில் நிறைந்த கௌரவமான மானிட அன்பை கட்டியெழுப்புவதற்காக தம்மை அர்ப்பணித்த நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் இன்றாகும். உலகெங்கும் வாழ்கின்ற இஸ்லாமியர்கள் இன்று மிகவும் உற்சாகமாக நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை சமய அனுஷ்டானங்களுடன் கொண்டாடுகின்றனர். மற்றவர்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்பிய அவர் அல் அமீன் என்ற பெயரிலும் பிரபல்யமானார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நற்குணங்கள் ஏனையவர்கள் மத்தியில் பிரயல்யமடைந்ததுடன் இஸ்லாமிய மதத்தை உலகெங்கும் பரப்பி அவரது 40வது வயதில் அல்ஹாவின் தூதராக கூடிய வரத்தை அவர் பெற்றார். பின்பு அரேபிய மக்களை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு வழிகாட்டிய அவர், 23 வருடங்களாக இறைவனிடமிருந்து கிடைத்த ஏவல்களை நிறைவேற்றினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்