ஊரடங்கு உத்தரவு அனுமதிக்காக பொலிஸ் அதிகாரிகள் நியமனம்



பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ள பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு அனுமதிப் பத்திரம் தொடர்பில், எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதுவரை நாடு முழுவதும் 56 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 15 பொலிஸ் பிரிவுகளிலும், குருநாகலில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் களுத்துறையில் 3 பொலிஸ் பிரிவுகளுக்கும் கம்பஹா மாவட்டம் முழுவதும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்