2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் குறித்து மங்கள தெரிவித்தது என்ன?


2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் நிதி மோசடியை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ் சாட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள நிதியை எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு அனுமதியளிப்பதன் ஊடாக 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் நிதிமோசடியை உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கிறது என்று மங்கள குற்றஞ்சாட்டியுள்ளார்.



2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் பிரதமரும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் உள்ளடக்கப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான கொள்கையை விமர்சித்து மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவ்வித கேள்விகளுமின்றி வெளிநாடுகளில் பதுக்கிவைக் கப்பட்டுள்ள நிதியை எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுப்பதன் ஊடாக 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் நிதிமோசடியை உத்தியோகப் பூர்வமாகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


இதனூடாக நிதிச்செயற்பாட்டு செயலணியின் பண மோசடி கண்காணிப்புப்பிரிவின் சாம்பல் பட்டியலுக்குள் மீண்டும் நாம் உள்வாங்கப்படப்போகிறோமா? ஏற்கனவே அதிலிருந்து வெளியேறுவதற்கு நிதியமைச்சினால் பல ஆண்டுகள் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்