புதிய அரசாங்கத்தின் தோல்வியடைந்த வரவு செலவுத்திட்டம் - அஷோக அபேசிங்க



அரசாங்கம் முன்வைத்துள்ள 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தோல்வியடைந்த வரவு செலவுத் திட்டமாக இருப்பதாகக் குற்றஞ்சுமத்திய எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கும், பெரும் செல்வந்தர்களுக்குமே வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும், 2005ஆம் ஆண்டு முதல் ஆட்சிக்கு வந்த தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதாரத்துக்கு என்ன செய்துள்ளாரெனவும் அவர் வினவினார்.

சிறைச்சாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுறை சந்திரகாந்த் எவ்வாறு நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள முடியுமெனவும், மக்களை ஏமாற்றும் விடயங்களே வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்