தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, மூடப்பட்ட ஹொரன பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றிலிருந்து மேலும் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் 450 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதன்போது 250 பேரின் அறிக்கை கிடைத்துள்ளதாகவும் இதில் 23 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் 750 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்