யாழில் வெளிமாவட்ட பஸ்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை



வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும், பஸ்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கையொன்றை, முன் வைத்துள்ளதாக மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த மாநகர முதல்வர்,

யாழ்ப்பாண பிரதேசங்களுக்கான பஸ்களைக் கூட கட்டுப்படுத்தியிருக்கின்றோம். எதிர்வரும் நாள்களில், மேலும் சில விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளளோம் என்று கூறிய மாநகர முதல்வர், யாழ்.மாவட்டத்தில் கொரோனா மிக மோசமடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்